ஒன்றாக கொரோனாவை வெல்வோம்: கொரோனா விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை ட்விட்டரில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!!!

புதுடெல்லி: சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,526 லட்சத்தை தாண்டியது. தற்போது, வரை 58,27,705 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில  நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி கண்டுபிடிக்க மருத்துவர்கள் இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கொரோனா தடுப்பூசி இல்லாத நிலையில்,  முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கைகளை கழுவுதல் மட்டுமே பாதுகாப்பாக இருக்க ஆயுதங்கள். பொது இடங்களில் இந்த நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரம் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

இந்நிலையில், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பிரச்சார இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நாட்டில் கொரோனாவுக்கு  எதிரான போர் மக்களால் தொடங்கப்பட்டது. எங்கள் COVID வீரர்களிடமிருந்து பெரும் பலத்தைப் பெறுகிறது. நமது ஒருங்கிணைந்த முயற்சி பல உயிர்களை காப்பாற்ற உதவியது. நாம் வேகத்தைத் தொடர வேண்டும் மற்றும் எங்கள்  குடிமக்களை வைரஸிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று #Unite2fightcorona என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். தற்போது, இந்த  #Unite2fightcorona என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டுவிட்டரில்  4-வது இடத்தில் உள்ளது.

மற்றொரு பதிவில்,

#Unite2FightCorona ஐ அனுமதிப்போம்!

நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்:

* முகக்கவசம் அணியுங்கள்.

* கைகளை கழுவவும்.

* சமூக இடைவெளி பின்பற்றுங்கள்.

‘தோ கஜ் கி தூரி’ பயிற்சி.

* ஒன்றாக, நாங்கள் வெற்றி பெறுவோம்.

* ஒன்றாக, COVID-19 க்கு எதிராக வெல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: