பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், பாடப்புத்தகங்கள், காலணிகள் வழங்கப்படும் : முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி!!

ஹைதராபாத் : ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்கள் 43 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றப் பிறகு பல அதிரடி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோருக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை, ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே வரும் திட்டம், சட்டவிரோதமான மதுபானக் கடைகள் அகற்றம், விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்காக அசத்தலான அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான 3 செட் சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பள்ளி பை, காலணிகள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதற்காக ரூ. 650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர். பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் , அரசு உதவியில் இயங்கும் பள்ளிகளுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: