ஆன்லைன் மூலம் உணவு விற்பனை; சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்: 50 சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சி

சென்னை: இந்தியா முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் உணவு பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்காக தேர்வான நகரங்களில் சென்னையும் ஒன்று. இந்த திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாலையோர வியாபாரிகள் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் முதல்கட்டமாக 50 சாலையோர வியாபாரிகள் தேர்வு செய்யப்பட்டு பான் எண் வாங்குவது, உரிய தரத்துடன் உணவுகளை சமைப்பது, செயலியை பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகள், இந்திய உணவு தர நிர்ணய அமைப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் என்றார்.

Related Stories: