திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உண்டியல் திறப்பு: ரூ28 லட்சம் ரொக்கம், 72 கிராம் தங்கம், 88 கிராம் வெள்ளி

சென்னை: கொரோனா காரணமாக கோயில்களில் உண்டியல் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட வில்லை.இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு தற்போது உண்டியல் எண்ணுதற்கு கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

இணை ஆணையர் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் நோட்டுகளாக 26 லட்சத்து 27 ஆயிரத்து 57ம், நாணயங்களாக 2 லட்சத்து 24 ஆயிரத்து 971ம், 72 கிராம் 830 மில்லி கிராம் தங்கம், 88 கிராம் 730 மில்லி கிராம் வெள்ளி,11 வெளிநாட்டு கரன்சிகள் கிடைக்கப்பெற்றன என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: