திவான் ஹவுசிங் பைனான்ஸ் பெயரில் ரூ218 கோடி மோசடி முன்னாள் இயக்குநர்கள் 2 பேர் மும்பையில் கைது

சென்னை: திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் பெயரில் ₹218 கோடி மோசடி வழக்கில், மும்பையில் இருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர்.

மும்பையை தலைமையிடமாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது.  இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்களாக கபில் ராஜேஷ் வத்வான் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் ராஜேஷ் வத்வான் ஆகியோர் இருந்தனர். இந்த நிறுவனத்தின் பல போலி திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்தனர்.

ஆனால் சொன்னப்படி இந்த நிறுவனம் பணம் கட்டிய பயனாளிகள் பெயரில் அந்த நிறுவனத்தில் வரவு வைக்காமல் அதிகாரிகளே மோசடி செய்தனர். இதனால் பணம் கட்டிய பயனாளிகள் தங்களது பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றினர். இதையடுத்து அந்த நிறுவனத்தில் முதலீடு ெசய்து ஏமாந்த பயனாளிகள் அளித்த புகாரின் படி கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கபில் ராஜேஷ் வத்வான் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் ராஜேஷ் வத்வான் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரகாஷ் பாபு தலைமையிலான தனிப்படை மும்பை சென்று கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: