மேகமலை, ஆண்டிபட்டியில் மழை வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியது

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டிபட்டியில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 43.2 மி.மீ., மழை பதிவானது. மேகமலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 1,200 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதையடுத்து அணையின் நீர் மட்டம் 60 அடியை எட்டியது.தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டிபட்டியில் 43.2 மி.மீ., (இன்று காலை 8 மணி வரை) மழை பதிவானது. தேனி அரண்மனைப்புதுாரில் 22.8 மி.மீ., கூடலுாரில் 11 மி.மீ., பெரியாறு அணையில்.6 மி.மீ.,தேக்கடியில் 2.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.3 மி.மீ., வைகை அணையில் 6.4 மி.மீ., வீரபாண்டியில் 7 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 1,200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

அணையில் இருந்து மதுரை மாவட்ட நெல் சாகுபடிக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து விநாடிக்கு 2,022 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் தற்போது நீர் மட்டம் 59.75 அடியை எட்டி உள்ளது. மூல வைகை, மேகமலையில் பலத்த மழை பெய்துள்ளதால் வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  இன்று மாலைக்குள் நீர் மட்டம் 60 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணைகளுக்கும் லேசான அளவில் நீர் வரத்து உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: