வார இறுதி நாட்களில் களை கட்டும் சுற்றுலா தலங்கள்: பிற நாட்களில் வெறிச்சோடுகிறது

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா தலங்கள்  களை கட்டுகின்றன. மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள்  கூட்டமின்றி வெறிச்சோடுகிறது.. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள்  உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. மே மாதம் நடைபெற இருந்த ேகாடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக  சுற்றுலா தொழிலை நம்பி பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து  தரப்பினரும் கடும் பாதிப்பிற்குள்ளானார்கள். 5 மாதங்களுக்கு பின் கடந்த மாதம் 9ம் தேதி முதல் நீலகிரியில் பூங்காக்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. வெளியூர் சுற்றுலா பயணிகள்  இ-பாஸ் பெற்று வரலாம் என தெரிவிக்கப்பட்டது.

 சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த அளவிலான இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர பிற  தொட்டபெட்டா, முதுமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள்  திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. வார இறுதி  நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஓரளவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை உள்ளது. வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக  உள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள்  வெறிச்சோடி காணப்படுகின்றன. வார இறுதி நாட்களில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட 6  பூங்காக்களையும் சுமார் 2 ஆயிரம் பேர் பார்த்து ரசிக்கின்றனர். வார நாட்களில் 650ஐ தாண்டுவதில்லை. காலையில் வரும் சுற்றுலா பயணிகள்  அனைத்து பூங்காக்களையும் பார்த்து விட்டு மாலையில் ஊர் திரும்பி விடுகின்றனர். இதனால் ஓட்டல்கள், காட்டேஜ்கள் திறக்கப்பட்டும் அறைகள்  நிரம்புவதில்லை.

Related Stories: