ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு கோயில் கடைகளுக்கு ஏலம் நீட்டிப்பு

சென்னை: தமிழக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கடந்த 2019 ஜூலை 1ம் தேதி முதல் 2020 ஜூன் 30ம் தேதி வரை பொது ஏலம் நடத்தப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்ட பலவகை உரிம இனங்களுக்கு கோவிட்-19 நோய் தொற்றின் காரணமாக பக்தர்கள் வருகைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் ஜூன் 30ம் தேதி வரை உள்ள காலத்திற்கு கணக்கிட்டு வரும் நாட்களில் ஈடாக ஏலதாரர்களுக்கு கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டன. ஏலதாரர்களின் மனு பொது ஏலம் தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட விவரம் மற்றும் தக்கார்/அறங்காவலர் தீர்மானம் ஆகியவற்றுடன் கோயில்களில் இருந்து வரப்பெறும் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஏல உரிம இனங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படும் நாட்கள் முதல் போக கடைகளுக்கு மீதமுள்ள நாட்களுக்கு கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று கொண்டும், உடன் பொது ஏலம் திறப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தற்போது அனுமதி வழங்கப்பட்டு வரும் கால நீட்டிப்பு காலம் முடிந்த மறுநாள் முதலே கடைகளுக்கு அந்தந்த உரிமங்களுக்கு அங்கீகரிக்கப்படும் புதிய ஏலதாரர் உரிமம் ஏற்க தவறாது ஆணையம் செய்யும் வகையில் உரிய அங்கீகாரம் முன்கூட்டியே பெற வேண்டும்.

Related Stories: