ராம்விலாஸ் பஸ்வான் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மத்திய உணவு, குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலன் பாதுகாப்பு அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலம் குன்றி டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜனசக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பஸ்வானிடம்,  ராம் விலாஸ் பஸ்வானின் உடல்நலம் பற்றி விசாரித்து அறிந்ததுடன், தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் பூங்கொத்தையும் கொடுத்து அவர்கள் விரைவில் குணமடைய தலைவரின் விழைவையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.

Related Stories: