சிறை காவலர் கொலை வழக்கு கோர்ட்டில் சரணடைந்த 5 பேரிடம் போலீஸ் காவலில் 3 நாள் விசாணை: நீதிபதி உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பழையசீவரத்தை சேர்ந்தவர் இன்பரசன். சென்னை புழல் சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 28ம் தேதி சென்னை புழல் சிறை காவலர் இன்பரசன், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பழைய சீவரத்தை சேர்ந்த வரதராஜன், ராஜதுரை, செந்தில்குமார், ஜான்சன், விக்னேஷ் ஆகியோர் கடந்த 29ம் தேதி தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, சரணடைந்த குற்றவாளிகள் 5 பேரையும், பாலூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார், 5 பேரையும் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரிதேவி, குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பாலூர் போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 5 பேரையும் போலீசார், பாலூர் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்த விசாரணையின் முடிவில், சிறைக்காவலர் இன்பரசன், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது காதல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

Related Stories: