நெய்வேலி ஊராட்சியில் சிசிடிவி கேமரா அமைப்பு: டிஎஸ்பி தொடங்கி வைத்தார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் நெய்வேலி ஊராட்சியில்,ஊராட்சி நலன் கருதி அந்தந்த கிராம பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு தெரிவித்தனர். அதன் பேரில் நெய்வேலி ஊராட்சியில் 12 இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா கவியரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவணன், எஸ்ஐக்கள் வெங்கடேசன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி கலந்துகொண்டு 12 இடங்களில் பொறுத்தப்பட்ட சிசிடிவி கேமராவை தொடக்கி வைத்து பேசியது: கிராமங்களில் சிசிடிவி பொருத்துவதால் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்கலாம். மேலும் குற்றங்கள் நடந்தாலும் இந்த சிசிடிவி மூலம் குற்றவாளிகளை கண்டறியலாம் எனக் கூறினார். 

Related Stories: