புதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்க கலெக்டர்களுக்கு அதிகாரம்: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களே புதிய கொள்முதல் நிலையங்களை திறக்க அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புபணிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், டெங்கு நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்ட முடிவில் அமைச்சர் காமராஜ் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 189 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எந்த பகுதிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையோ அந்த பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களே புதிய கொள்முதல் நிலையங்களை திறக்க அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: