நிதிப் பற்றாக்குறையால் திண்டாடும் உள்ளாட்சி அமைப்புகள்: உள்ளாட்சி நிதியை கொரோனா தடுப்பு பணிக்கு திருப்பி விட்டதால் திணறல் அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தடுமாற்றம்

உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி நிர்வாகம் இருந்த காலம் அதிமுக ஆட்சிக் காலத்தில் மாறிப்போனது. தனி அலுவலர்களால் ஆளப்பட்டு வந்தது. இதனால் அடிப்படை வசதிகளை பெற முடியாமல் மக்கள் தவித்தனர். பின் ஒருவாறு ஊரக உள்ளாட்சிக்கு தேர்தல் நடந்தது. ஆனால் தற்போது நிதி ஏதும் ஒதுக்காததால் உள்ளாட்சி நிர்வாகம் நிலைகுலைந்து கிடக்கிறது. ஒன்றியங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் பொதுநிதி தொகையையும் கொரோனா பணிகளுக்கு திருப்பி விடுவதால் உள்ளாட்சிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

குறிப்பாக பல ஒன்றியங்கள் திமுக வசம் இருப்பதால் நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பல மாதங்களாக நிதியில்லாத நிலையில் குண்டும் குழியுமான சாலைகள், சுகாதாரச் சீர்கேடுகள், குடிநீர் பற்றாக்குறை என மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் எந்த பலனும் மக்களுக்கு கிட்டாத நிலைதான் உள்ளது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் முதுகெலும்பாக திகழ்வது ஊராட்சி அமைப்புகள்தான். அரசு இதற்கு போதிய நிதி ஒதுக்காதது துரதிருஷ்டவசமானது. இதனால் ஊராட்சி அமைப்புகள் முடங்கிப்போயுள்ளது. தமிழக ஊராட்சிகளை காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இப்போதுள்ள முக்கிய கடமை. இதுகுறித்து நான்கு பேர் இப்பகுதியில் அலசுகின்றனர்.

Related Stories: