38 பேருக்கு கொரோனா வந்ததால் ராயபுரம் சாலைகளுக்கு சீல் வைப்பு

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று, பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு குறைந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பொதுமக்கள் சகஜமாக வெளியில் நடமாடியதால், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயபுரம் மண்டலம் 49வது வார்டுக்கு உட்பட்ட பண்டக சாலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும், ஒரே வீட்டில் 7 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், அவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அந்த சாலையை மூடி சீல் வைத்தனர். தண்டையார்பேட்டை போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மேற்கண்ட பகுதியில் முகாமிட்டு, நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், 48வது வார்டுக்கு உட்பட்ட நமசிவாயம் தெருவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சாலை முடபட்டது.

Related Stories: