போதை பழக்கத்தை தடுக்க புதிய பாய்ஸ் கிளப் துவக்கம்

புழல்: சோழவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா, பான்பராக், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இளைஞர்கள்  மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சட்டம் - ஒழுங்கு சீர்கெடும் வகையில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை தடுக்கும் வகையில் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியில் பாய்ஸ் கிளப் மையம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று முன்தினம் பொன்னேரி போலீஸ் டிஎஸ்பி கல்பனாதத் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டெல்லி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், இப்பகுதி  இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து விலகி உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் அவர்கள் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், போலீசார், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

Related Stories: