நோய் தடுப்பு மருந்தை தடையில்லாமல் வழங்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை தடை இல்லாமல் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில்,‘ கடந்த மே மாதம் நிர்வாகம் வழங்கிய ரப்பர் கையுறை, 30 முறை துவைத்து பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமிநாசினி, 200 கிராம் எடை கொண்ட கபசுர குடிநீர் பவுடர் ஆகியவை தற்போது தீர்ந்துவிட்டது. ஆய்வுக்கு வரும் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்த போதிலும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஊழியர்கள் தங்களின் சொந்த பணத்தில் இதை வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஊழியர்களுக்கு தடை இல்லாமல் கொரோனா நோய் தடுப்பு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: