செயின்ட் கோபைன் கம்பெனிக்கு 2,835 டன் ஜிப்சம் சரக்கு ரயில் மூலம் ரயில்வேக்கு 14 லட்சம் வருவாய்: சென்னை கோட்டம் அறிவிப்பு

சென்னை: செயின்ட் கோபைன் கம்பெனிக்கு 2,835 டன் ஜிப்சம் ஏற்றி சென்ற தன் மூலம் ரயில்வேக்கு 14,05,480 வருமானம் கிடைத்துள்ளது என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், செயின்ட் கோபைன்  நிறுவனத்துக்கான  ஜிப்சம் ஏற்றிச்செல்லும் புதிய சரக்கு போக்குவரத்தை தொடங்கியுள்ளது. இதன் முதல் சரக்கு ரயில் சேவை நேற்று முதல் சென்னை காமராஜர் துறைமுகத்திலிருந்து கர்நாடகாவில் உள்ள பிடதிக்கு துவங்கப்பட்டது. 2,835 டன் ஜிப்சம் ஏற்றிச் சென்றதன் மூலம் ரயில்வேக்கு ரூபாய் 14,05,480 வருவாயாக கிடைத்துள்ளது.

மொத்தம் 45 போஸ்ட் வகை சரக்கு வேகன்கள் மூலம்   சென்னையிலிருந்து பிடதிக்கு ஏற்றி அனுப்பப்பட்டது. மேலும், சரக்கு போக்குவரத்து மேம்பாட்டு குழுவின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் பல புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ரயில்வேயுடன் இணைந்து வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளன. சாலைப் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகள்  தற்போது ரயில் மார்க்கமாக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது 55,000 டன் ஜிப்சம் ஓமன் நாட்டிலிருந்து காமராஜர் துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது. துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஜிப்சம் வரும் நாட்களில் சரக்கு ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லும் பட்சத்தில் ரயில்வேக்கு கூடுதல் வருவாய்  கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: