தரமற்ற சிப்ஸ் விற்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு 25 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னை பெரவள்ளூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் தரமற்ற சிப்ஸ் விற்றதாக எழும்பூரில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண் சபாபதி, தரமற்ற சிப்ஸ் விற்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் ஸ்டோர் மேலாளர் ஆகியோருக்கு தலா 1 வாரம் சாதாரண சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யயப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அழித்து அது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: