அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?.: முதல்வர் வேட்பாளர் பட்டியலில் வைத்திலிங்கம் பெயர் சேர்க்க கோரிக்கை

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் பெயரையும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பானந்தாள் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வீரமணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதிமுகவில் முக்கிய பங்குவகிக்கும் வைத்திலிங்கம் கட்சியின் ஐவர் குழு மற்றும் நால்வர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பட்டியலில் வைத்திலிங்கத்தின் பெயரை சேர்க்குமாறு வலியுறுத்த கட்சியினர் பயப்புடுவதாகவும் வீரமணி கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஸ் இடையே கரச்சார விவாதம் நடைபெற்றது.

ஓபிஎஸ்- ஈபிஸ் ஆகிய இருவரும் நேரடி வாக்குவாதத்தில் நேற்று முன்தினம் ஈடுப்பட்டனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நடைபெற்ற முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், வைத்திலிங்கத்தின் பெயரை அவரது ஆதரவாளர்கள் முன்மொழிந்து இருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: