மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு உளவுத்துறை காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதி உளவுத்துறை காவலராக பணியாற்றி வரும் நபர், போலீஸ் நண்பர்கள் வாட்ஸ் அப் குழுவில் நேற்று முன்தினம் அதிகாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வாசகம் அடங்கிய பதிவை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வாட்ஸ் அப் குழுவில் சென்னை உளவுத்துறை உயர் அதிகாரிகள் பலர் உள்ளனர். காவலரின் பதிவை பார்த்து உயர் காவல் துறை அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன்படி உளவுத்துறை காவலரை போலீஸ் கமிஷனர் நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் போலீஸ் நண்பர்கள் குழுவில் மோடி குறித்து அவதூறாக பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து, போலீஸ் கமிஷனர் அதிரடியாக உளவுத்துறை காவலரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், அவதூறு பதிவு குறித்து துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: