தமிழக போக்குவரத்துத்துறைக்கு புதிய இணை போக்குவரத்து கமிஷனர்

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறைக்கு புதிய இணைபோக்குவரத்து கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்துத்துறை கமிஷனர்/ முதன்மை செயலாளர் கடிதம் வாயிலாக இணை போக்குவரத்து கமிஷனர் (விதிகள்) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். 23.5.20ல் இருந்து இருக்கும் இக்காலிப்பணியிடம் மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசுக்கு விழுப்புரம் போக்குவரத்துத்துறையில் துணை போக்குவரத்து கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமாரை, இணைப்போக்குவரத்து கமிஷனராக நியமிக்க முன்மொழிவு செய்திருந்தார். இதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து சுரேஷ்குமாருக்கு தற்காலிகமாக இணைப்போக்குவரத்து கமிஷனர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: