12 மாற்றுத்திறனாளிகள் தூய்மை பணியாளராக நியமனம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் செவித்திறன், பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளிகள் 12 பேர் உடல் தகுதி அடிப்படையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி மற்றும் உரம் தயாரிக்கும் பணிக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையாளர் ஜானி வர்கீஸ் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் தேவேந்திரன் செயற்பொறியாளர் பால் தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>