உதவி கமிஷனருக்கு கொரோனா

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர், கடந்த ஒரு வாரமாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று வெளியான முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அவரது அறை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அவரை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>