சென்னை: திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.