தமிழகத்தில் ஒரேநாளில் 5,647 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 5.75 லட்சமாக உயர்வு: மாநில அளவில் 9,233 பேர் இறந்தனர்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5.75 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் 85 பேர் நேற்று உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 9,233 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேல் கொரோனா தொற்று இதே நிலையில் தான் உள்ளது. ஆனால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை கடந்த 10ம் தேதி 60 பேர் முதல் நேற்றுமுன்தினம் வரை 76 பேர் வரை தினமும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று 85 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச்சேர்த்து மொத்த பாதிப்பு 5.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 94,037 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் 1,187 பேர், செங்கல்பட்டு 259, கோவை 656, கடலூர் 212, காஞ்சிபுரம் 148, நாமக்கல் 134, நீலகிரி 145, சேலம் 296, தஞ்சாவூர் 179, திருவள்ளூர் 235, திருவண்ணாமலை 136, திருவாரூர் 141, திருப்பூர் 188,  வேலூர் 138, விழுப்புரம் 161 என மாநிலம் முழுவதும் 5,645 பேரும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 என சேர்த்து 5,647 பேருக்கு நேற்று தொற்று உறுதி ெசய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 918 ஆண்கள், 2 லட்சத்து 28 ஆயிரத்து 069 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை5 லட்சத்து 19 ஆயிரத்து 448 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 336 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் 85 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் 23 பேர், செங்கல்பட்டு 4, கோவை 5,  ஈரோடு 3, புதுக்கோட்டை 4, சேலம் 6, தஞ்சாவூர் 6, தேனி 3, திருவள்ளூர் 3, திருவண்ணாமலை 3, திருப்பூர் 4, வேலூர் 5 என மாநிலம் முழுவதும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை சுற்றி  2.49 லட்சம் பேர் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 5,75,017 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 1,62,125 பேர், செங்கல்பட்டு 34,168, திருவள்ளூர் 31,449, காஞ்சிபுரம் 21,537 என 4 மாவட்டத்தில் மட்டும் 2,49,279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 வயது முதல் 60 வயதுக்குள் 4.77 லட்சம் பேருக்கு பாதிப்பு  

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குள் ஆண்கள் 12,198, பெண்கள் 11,086 என மொத்தம் 23,284  பேரும், 13 வயது முதல் 60 வயதுக்குள் ஆண்கள் 2,88,299, பெண்கள் 1,89,413, திருநங்கை 30 பேர் என மொத்தம் 4,77,742 பேரும், 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் 46,421, பெண்கள் 27,570 என  மொத்தம் 73,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 13 வயது முதல் 60 வயதுக்குள் 4.77 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: