காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும்  வகையில் அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>