×

திருப்பூரில் 2017ல் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை..!!

சென்னை: திருப்பூரில் 2017ல் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பணியில் இருந்த டி.எஸ்.பி. தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மாக்கை எதிர்த்து போராடியதால் போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளதாக 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இடைக்கால தடை விதித்தார்.

Tags : trial ,ICC ,protests ,Tirupur , Tiruppur, Tasmag, 9 persons, trial, iCourt ban
× RELATED ஐகோர்ட் நீதிபதி ரவிச்சந்திரபாபு ஓய்வு