கோயம்பேடு மார்க்கெட்டில் சிஎம்டிஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு ;28-ம் தேதி திறப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வரும் 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று காலை சிஎம்டிஏ செயலர் கார்த்திக்கேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் அங்கு சென்று ஆய்வு செய்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா நோய்ப்பரவல் அதிகரிப்பால் மூடப்பட்டது. தற்போது பூந்தமல்லி அருகே திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே கடந்த மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, வரும் 28-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இன்று காலை சிஎம்டிஏ செயலர் கார்த்திகேயன் தலைமையில் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது 200 கடைகள் மட்டுமே திறக்கப்படலாம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: