கொரோனா நோயாளிகள் 400 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை

சென்னை: கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்துகள் இல்லாத நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அபாய கட்டத்தில் இருந்து மீண்டு வர பிளாஸ்மா சிகிச்சை முக்கிய பங்காற்றி வருகிறது. இதற்காக தமிழகத்தின் முதல் பிளாஸ்மா வங்கி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சேலம், மதுரை, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிளாஸ்மா வங்கி செயல்பட தொடங்கியுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இதுவரை வரை தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் உள்பட 194 பேர் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனர். இதன் மூலம் 400க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒருவரிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா அணுக்களை சராசரியாக இருவருக்கு வழங்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: