கொரோனா பாசிட்டிவ் ; 90% நுரையீரல் பாதித்தநோயாளி தீவிர சிகிச்சையால் குணமடைந்தார்: 90 நாளுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை : சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 58 வயதானவர் முனியம்மா ஆஷா. இவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜூன் 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சோதனை செய்த போது 90 சதவீதம் நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் மற்றும்் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 90 நாட்கள் சிகிச்சை பெற்ற இவர் தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

இதைப்போன்று காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயதான ஐயப்பன் என்பவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் 21ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆக்ஸிஜன் அளவு 80% கீழ் இருந்தது. சிடி ஸ்கேன் சோதனையில் இரண்டு நுரையீரல்களும் 95 சதவீதம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை காரணமாக அவரின் நுரையீரல் தொற்று 30 சதவீதமாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து தொற்றில் முழுவதும் குணமடைந்து 30 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.

இவர்கள் இருவரையும் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ், மருத்துவர்கள் சுஜாதா, முகமது கலிபா, மணிமாறன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பு வைத்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள உயர்தர சிகிச்சைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், நுட்புணர்கள், பணியாளர்கள் என அனைவரின் சேவையால் இருவரும் குணமடைந்து வீடுதிரும்பியதற்கு இவருரின் குடும்பத்தினர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகதாரத்துறைக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: