புதிதாக 5,337 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5.50 லட்சம்: 4.97 லட்சம் பேர் வீடு திரும்பினர்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.50 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 84,730 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 989 பேர், செங்கல்பட்டில் 231 பேர், திருவள்ளூரில் 230 பேர், காஞ்சிபுரத்தில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 187 ஆண்கள், 2 லட்சத்து 19 ஆயிரத்து 457 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 5,406 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 350 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 19 பேர், சேலத்தில் 11 பேர், கோவை, ஈரோட்டில் தலா 4 பேர், கடலூர்,தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், திருப்பூர், தேனி, சிவகங்களை, நாமக்கல், காஞ்சிபுரம், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, புதுக்கோட்ைட, திருப்பத்தூர், திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 76 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதில் 7 பேர் கொரோனாவால் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். 69 பேர் இணை நோய் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,947 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: