வங்கியில் 60 லட்சம் மோசடி: கர்நாடக தொழிலதிபர் அதிரடி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: வங்கியில் கார் லோன் பெற்று 60 லட்சம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). தொழிலதிபரான இவர் சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் சிண்டிகேட் வங்கியில் 8 பேர் மீது 60 லட்சம் கார் லோன் பெற்றுள்ளார். ஆனால் கார் லோனுக்கான மாத தவணை சதீஷ்குமார் கட்டவில்லை என்ற கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் லோன் வாங்க 8 பேர் காடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது சதீஷ்குமார் கொடுத்த அனைத்து ஆவணங்களும் போலியானது என தெரியவந்தது. அதைதொடர்ந்து வங்கி அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 60 லட்சம் லோன் பெற்று மோசடி செய்த சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் சதீஷ்குமார் போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்து கொண்டு தலைமறைவாகிவிட்டார். பின்னர் செல்போன் சிக்னல் உதவியுடன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான தும்கூரில் கைது செய்தனர். அதைதொடர்ந்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்து மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: