தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பம்: தமிழக தேர்தல் உயர் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செப்டம்பர் 20ம் தேதி  வரை 5  லட்சத்து 51 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் புதிதாக பெயர்  சேர்ப்பதற்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேரும், பெயர் நீக்குவதறகு 2 லட்சத்து 37 ஆயிரத்து 248 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 56 ஆயிரம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது. இதை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இரட்டை பதிவுகளை தற்போது கணினி மூலமாகவும் சரிபார்க்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில்  தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம்,் திருவொற்றியூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் மத்திய  அரசுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என்று் அவர் தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதை தள்ளிபோடுவதற்கு தமிழக தலைமை செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: