தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை : தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). லாரி டிரைவரான இவரை, நிலத்தகராறு முன்விரோதத்தில் கடந்த 17ம்தேதி ஒரு கும்பல் காரில் கடத்தி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு அதிமுக செயலாளர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களில் முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல், சுடலைக்கண் ஆகியோர் தலைமறைவாகினர்.

வாலிபர் செல்வன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யக்கோரி அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சொக்கன்குடியிருப்பில் இன்று 4வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் தனிப்படை போலீசார் வர்த்தக பிரிவு அதிமுக செயலாளர் திருமணவேல், சுடலைக்கண் ஆகியோரை தேடிவந்த நிலையில் அவர்கள் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.இருவரையும்  3 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: