இலவச மாற்றுப்பள்ளியில் மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் நடைபெற்று வரும் இலவச மாற்று பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் ப.மோகனவேல் தலைமை தாங்கினார்.

முதுநிலை திட்ட மேலாளர் ஆர்.கிருபகரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி நுழைவுச் சீட்டுகளை வழங்கினார். முதுநிலை திட்ட மேலாளர் ஆர். நம்பிராஜ் உதவி திட்ட மேலாளர்கள் ஜி.ராகவன், சிலம்பரசன் ஆகியோர் தேர்வு அறையில் மற்றும் தேர்விற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். தேர்விற்கு செல்ல உள்ள மாணவர்கள் அனைவருக்கும் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

Related Stories: