காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வருடந்தோறும் நடைபெறும் போஷன் மா ஊட்டச்சத்து மாத விழா குன்றத்தூர் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் .க. பானுமதி தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குன்றத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கொருக்கந்தாங்கல் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம் குத்துவிளக்கேற்றி கொண்டாடப்பட்டது.