தமிழகம் முழுவதும் அன்னிய பொருட்களை புறக்கணிப்போம் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளோம்: வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தா.வெள்ளையன் பேட்டி

காஞ்சிபுரம்:  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு காஞ்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் அறிமுக கூட்டம் தனியார் அரங்கில் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், பாலுசெட்டி சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான வணிகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தா.வெள்ளையன் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இக்கூட்டத்தில் பேசிய வணிகர்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அதனால் வியாபார பாதிப்புகள் குறித்தும் இனி வரும் காலங்களில் இது போல் நிகழாமல் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இக்கூட்டத்தில் வருங்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து வெள்ளையன் வணிகர்களுக்கு எடுத்துரைத்தார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் , அன்னிய பொருட்களின் மோகத்தை குறைக்கும் வகையில் காந்தி காட்டிய வழியில் அன்னியப் பொருட்கள் வாங்குவதை புறக்கணிப்போம் எனும் பிரசாரத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ளதாகவும், அதேபோல் அப்பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் நிகழ்வு நடைபெறும். அது காஞ்சிபுரத்திலிருந்து துவங்கும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: