வீடுகளை தேடி பொருட்கள் விநியோகம் தமிழகத்தில் 3,501 நகரும் ரேஷன் கடைகள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: வீடுகளுக்கே சென்று பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் தமிழகத்தில் 3,501 நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகிறது. இந்த கடைகள் மூலம் கார்டுதாரர்கள், தங்கள் முகவரிக்கு உட்பட்டு ஒதுக்கியுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று, அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும். ஆனால், காடு, மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு, போதிய சாலை வசதி இல்லாததால், அங்கு வசிப்போர், ரேஷன் கடைகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். எனவே, நகரும் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதையேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ₹9.66 கோடியில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் 400 நகரும் ரேஷன் கடை, நாகை 262, கிருஷ்ணகிரி 168, திருவண்ணாமலை 212 கடைகள் உட்பட 3,501 கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் கொடியசைத்து வைத்து இன்று காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

Related Stories: