×

அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சத்தியபாமா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வி பெறுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டார். அரசின் நடவடிக்கையால் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 


Tags : Tamil Nadu ,Palanisamy ,state , Tamil Nadu is the first state to ensure higher education for all: Chief Minister Palanisamy
× RELATED தமிழக முதலமைச்சர் பழனிசாமியின்...