×

மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில், மாநில விலங்கான வரையாடுகள், அரிய வகை வனவிலங்குகள் பட்டியலில் அட்டவணை1ல் இடம் பெற்றுள்ளது. அழிந்து வரும் வரையாடுகளை காக்கும் வகையில், தமிழக அரசு, வரையாடுகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்தாண்டு, அக்., 23ல் திட்டம் துவக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதன் முறையாக, ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி, வரும் 29ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை நடக்கிறது.
இந்த பணி, நீலகிரி, முக்குருத்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வனஉயிரின சரணாலயம் வரையிலான, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வரையாடுகளின், 140 வாழ்விடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் வால்பாறை வனச்சரகத்தில் புல்மலை சுற்றுகளை ஒட்டிய கேரள வனப்பகுதிகளிலும், வரையாடுகள் அதிகளவு காணப்படுவதால், இப்பகுதியில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.

The post மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : State Wildlife Draft Survey ,CHENNAI ,Tamil Nadu ,State Zoological Survey ,Tamil Nadu Government ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...