மஹாளய அமாவாசைக்கு சுருளி அருவிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்

கம்பம்: மஹாளய அமாவாசையான நேற்று முன்னோருக்கு தர்ப்பணம், திதி போன்ற சடங்குகள் செய்ய பக்தர்கள், சுருளி அருவிக்கு வந்தனர். இவ்வருடம் கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமலில் இருப்பதால் சுருளி அருவிக்கு பக்தர்கள் வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக நினைத்து பெரும்பாலான பொதுமக்களும், பக்தர்களும் சுருளி அருவிக்கு கார், டூவீலர் போன்ற வாகனங்களில் படையெடுக்க தொடங்கினர். இதனால் சுருளி அருவிக்கு செல்லும் முக்கிய சாலையான சுருளிப்பட்டி சாலையில் போலீசார் நிறுத்தப்பட்டு சுருளி அருவிக்கு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

Related Stories: