கொடிசியா கொரோனா வார்டில் பேட்டரி வாகனம் மூலம் தூய்மை பணி

கோவை: கோவை கொடிசியாவில் உள்ள கொரோனா வார்டில் நவீன பேட்டரி வாகனம் மூலம் தூய்மை செய்யும் பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை  கொடிசியா வளாகத்தில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இதில், உள்ள ஹால்  பி,டி,இ ஆகிய பகுதிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,128 படுக்கை வசதிகள் உள்ளது. இதில்,  நேற்றைய நிலவரப்படி 688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சிகிச்சை  மையத்தில் கொேரானா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டும் தொடர் சிகிச்சைகள்  அளிக்கப்படுகிறது.

இம்மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கூடுதல்  சுதந்திரம் வழங்கப்படுவதுடன், தரமான உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள்  நிறைந்து உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் பலர்  கொடிசியாவிற்கு சென்று சிகிச்சை எடுக்கவே விரும்பி வருகின்றனர்.  இந்நிலையில், இந்த மையத்தில் தினமும் காலை நேரத்தில் நோயாளிகள் உள்ள ஹால்  தூய்மை செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக, பேட்டரி வசதியுடன் கூடிய நவீன  வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தில் 500 லிட்டர் தண்ணீரில்  கிருமி நாசினி கலந்து வளாகம் முழுவதும் 20 நிமிடங்களில் தூய்மை  செய்யப்படுகிறது.

Related Stories: