நிவாரண தொகை பெற தெருவோர வியாபாரிகள் உடனே விவரங்களை வழங்க வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை:   சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளில் இதுவரை 14,633 பேருக்கு ஊரடங்கு நிவாரண தொகையாக முதல் கட்டமாக 1000/- மற்றும் இரண்டாம் கட்டமாக 1000/- சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது.  தற்போது மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரண தொகை 1000/- வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டம் நிவாரண தொகை பெறாத, பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை எண், செல்போன் எண், வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், IFSC குறியீட்டு எண் போன்ற விவரங்கள் கொண்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மண்டலத்தில் வழங்கும் பட்சத்தில் ஊரடங்கு நிவாரண தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: