திட்டப்பணிக்கு நிலம் கையகப்படுத்தும்போது உரிமையாளர் விவரம் வெளியிடப்படாது: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: விரிவான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் போது உரிமையாளரின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதாவது:கடந்த 1971ல் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டத்தின் 20ம் பிரிவில் 2வது உட்பிரிவானது விரிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் கூறப்பட்ட திட்டத்திற்கான சரியான செயல்படுத்தலுக்கு இடையேயான கால அளவு குறிப்பிடத்தக்க காலத்தை எடுத்துக்கொள்கிறது. மேலும் நில உரிமையாளர்களின் கூறப்பட்ட அடங்கலில் உள்ள விவரங்களை திரட்டுதல் தொடர்பான தேவையற்ற குழப்பம் மற்றும் அளவுக்கு மேற்பட்ட கால தாமதத்தை உருவாக்குகின்றது.

மேலும், தனியார் நிறுவனங்களில் உரிமையானது மாற்றத்துக்குள்ளாகும்.  விரிவான வளர்ச்சித் திட்டத்தின் முன்னேற்பாடுகளின் செயல்முறையை எளிதாக்கும் பொருட்டு கூறப்பட்ட திட்டத்தில், அந்த பகுதியில் உள்ள அனைத்து நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் உரிமை விவரங்களை குறிப்பிடும் தேவையை விட்டொழிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விரிவான வளர்ச்சி திட்டத்தின் முன்னேற்றபாட்டின் அறிவிப்பானது திட்டம் தொடர்பான மறுப்புகள் மற்றும் ஆலோசனைகளை எழுத்து வடிவத்தில் நபர் எவரிடமிருந்து வரவேற்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் மற்றும் அத்தகைய கோரிக்ைகயை செய்த நபர் எவருக்கும் கேட்கப்படுதலுக்கான நியாயமான வாய்ப்பு வழங்கப்படுவதால் நிலங்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுடன் ஆலோசனை செய்யும் தேவையை விட்டொழிக்க ேமலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, திட்டத்தில் உள்ளடங்கிய பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும்  கட்டிடத்தின் உரிமையாளர்கள் உட்பட உரிமையுடைய நபர் எவருக்கும் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் எழுப்புவதற்கான மற்றும் திட்டத்தின் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

Related Stories: