சந்தை குழுக்களை நிர்வகிக்கும் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு

சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதவாது: மத்திய அரசின் மாதிரி சட்டத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் வேளாண் விளைபொருளின் புவியியல் ரீதியான தடையற்ற வணிகம் மற்றும் பரிவர்த்தனை செய்வதற்கு விவசாயிகள் விளைபொருட்களை நேரம் மற்றும்  இடக்கட்டுபாடு ஏதுமின்றி விற்க உரிமை வழங்குவதற்கு வணிக செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு போட்டிச் சந்தைக்கு பன்மடங்கான வழிமுறைகள் உருவாகுவதை ஊக்குவிப்பதற்கு மாநிலத்தில் சந்தைகளையும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவும்ம் தகுந்த மாற்றங்களை மேற்கொள்வது தேவையானதாகிறது.

தனியார் சந்தை முற்றங்கள், தனியார் சந்தை துணை முற்றங்களை நிறுவுவதற்கான வழிமுறைகள், நேரடி சந்தைப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் சேகரிப்பு மற்றும் திரட்டல் மையங்கள் நிறுவுவது ஆகியவை மேற்சொன்ன நோக்கத்தினை அடைவதற்கு தேவையானதாகிறது. எனவே, தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துல் சட்டம் 33ம் பிரிவின் 1ம் உட்பிரிவின் கீழ் சந்தைக்குழுக்களின் விவகாரங்களை நிர்வகிக்க பணியமர்த்தப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது கடந்த மே 29ம் தேதி முதல் காலாவதியாகி விட்டது மற்றும் சந்தைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய இன்னும் சில காலம் தேவைப்பட்டது.

எனவே, கடந்த மே 29ம் தேதியில் இருந்து மேலும் 6 மாதங்கள் காலம் அல்லது சந்தை குழுக்களை மீள் உருவாக்கம் செய்திடும் வரையில் எது முந்தையதோ அது வரையில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டியது கட்டாயம் தேவையாகிறது. எனவே, இச்சட்டத்தில் திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்தது. அதன்பேரில் 2020 தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல் இரண்டாம் திருத்த அவசர சட்டமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Related Stories: