கொரோனாவை 5 நிமிடத்தில் கண்டறியலாம்: சென்னை ஐஐடியில் புது கருவி உருவாக்கம்

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ரெக்கவர் ஹெல்த்கேர் நிறுவனம் ஆகியவை இணைந்து, மனித எச்சில் மூலம் 5 நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர்.  அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து செல்லும் வகையில் அமெரிக்க-இந்திய நிதியை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பை ஏற்று, 400 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்டங்கள் வரப்பெற்றன. அவற்றில் இருந்து  அமெரிக்க-சென்னை ஐஐடி இணைந்த குழு தேர்வு செய்யப்பட்டது. குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களில்  புதிய முறைகளை புகுத்தி கொரோனா சவால்களை முறியடிக்கும் வகையிலான ஆலோசனைகளை வழங்கியதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ரெக்கவர் ஹெல்த்கேர் நிறுவனம்,  மனிதனின் ஒரு துளி எச்சில் மூலம் பயோசென்சாரை பயன்படுத்தி அதிக தரமான முடிவுகளை, வெறும் 5 நிமிடத்தில் பெறும் கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெற்றது. இந்த நிறுவனத்துடன் சென்னை ஐஐடி இணைந்து, இந்த கொரோனா தொற்றுக்கான ஆன்டிஜென் பரிசோதனை முறையை சந்தைப்படுத்த முன்வந்துள்ளது. இந்த பரிசோதனை முறை என்பது எளிதிலும், செலவு குறைவாகவும்,துல்லியமாகவும், பயன்பாட்டுக்கு வசதியாகவும் இருப்பதால் உலக சந்தையில் இது பெரிதும் விரும்பப்படுவதாகவும், தேவையாகவும் இருக்கிறது. இந்த கருவியை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறக்கட்டளை நிதி என்ற அமைப்பு, மேற்கண்ட ரெக்கவர்-சென்னை ஐஐடி குழுவுக்கு, ‘:ஊக்குவிக்கும் மானியம்’ என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

Related Stories: