செங்கை, காஞ்சி மாவட்டங்களில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம்: அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பொன்னையா தலைமையில், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சப் கலெக்டர் சரவணன், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக முகப்பில் உள்ள அண்ணா சிலைக்கு கலெக்டர் பொன்னையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் க.சுந்தர் எம்எல்ஏ, தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், இதயவர்மன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.குமார், பி.சேகர் உள்பட பலர் இருந்தனர். அதேபோல் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அண்ணா நூற்றாண்டு விழா நினைவுத்தூண் பகுதியில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், இளைஞரணி லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுப்பட்டினத்தில் திமுக பிரமுகர் தாமோதரன் தலைமையில், ஒன்றிய செயலாளர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அப்துல்மாலிக், ஊராட்சி செயலாளர் தாஜூதீன், திமுக நிர்வாகிகள் கயல் மாரிமுத்து, சம்சுகனி, முரளி, கண்ணன், சாமுவேல், தமிம் உள்பட பலர் கலந்துகொண்டனர். காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செங்கல்பட்டு மணிகூண்டு அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். செங்கல்பட்டு நகர திமுக பொதுக்குழு உறுப்பினர் அன்புசெல்வன், நிர்வாகிகள் திருவள்ளுவன், ராஜி, மண்ணு, மகளிர் அணி மாவட்ட நிர்வாகி சந்தியா, இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ், முனுசாமி, சங்கர் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய திமுக சார்பில், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செழியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், நகர துணை செயலாளர் பரசுராமன், நகர நிர்வாகிகள் பலராமன், சந்திரன், இரவி, சந்திரன், சுப்பிரமணி, இளைஞர் அணி நிர்வாகிகள் பாலு, கோபி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் ஒன்றிய அதிமுக சார்பில், நகர செயலாளர் ஜி.முத்து, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன், வழக்கறிஞர் சிவராமன், நகர ஜெ. பேரவை செயலாளர் லவன், முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், எத்திராஜன், அவைத்தலைவர் ஏழுமலை உள்பட பலர் மாலை அணிவித்தனர். திருப்போரூர் வடக்கு ஒன்றிய மதிமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகு தலைமையில் நகர செயலாளர் துரை, நகர அவை தலைவர் சம்சுதீன், நகர துணை செயலாளர் ஜெயபால் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் வேட்டூர் கிராமத்தில் திமுக நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமையில், அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் தரன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி, அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பின்னர், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

ஊராட்சி செயலாளர் கேசவேலு, ஒன்றிய செயலாளர் தணிகை அரசு, கிளை செயலாளர் ஆறுமுகம், கிணார் அரசு, சங்கர், சக்கரபாணி, தனபால், ராஜேஷ், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். லத்தூர் ஒன்றிய திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் கட்சி கொடியை ஏற்றி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். செய்யூர் ஊராட்சி செயலாளர் தணிகாச்சலம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், லத்தூர் ஒன்றிய துணை செயலாளர் ஹேமநாதன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்மொழிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சித்தாமூர் ஒன்றிய திமுக சார்பில், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிர்வாகிகள் நிர்மல்குமார், தனசேகர், சிற்றரசு, குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: