நெல் கொள்முதல் நிலையங்களை திறக்ககோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை முறையாக பதிவு செய்து, வேகமாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் தார்பாய் போட்டு மூடி பாதுகாத்திட வேண்டும். நெல் வியாபாரிகள், இடைதரகர்களை அனுமதிக்க கூடாது.  ஒரு நாளைக்கு 800 மூட்டை வாங்குவதற்கு பதிலாக 1,600 மூட்டைகளாக வாங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் ஜி.சம்பத் தலைமை வகித்தார்.

இதில், மாவட்ட செயலாளர் துளசி நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, வட்ட செயலாளர் பழனி, வக்கீல் கன்னியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். தகலறிந்த, திருவள்ளூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலைய உயரதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், தாமரைப்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: