அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் நீட்டை எதிர்க்க திராணி இல்லை: கே.ஆர்.ராமசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் வெளியில் வந்த காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு சம்பந்தமான கவன ஈர்ப்பை எடுத்து. அதிமுக உறுப்பினர் இன்பதுரையை பேச சபாநாயகர்  அழைத்தார். அவர், நீட் தேர்வு வந்தது சரியா தவறா என்பதை சொல்லாமல், இதற்கு காரணம் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் என்று சொன்னார்.

காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போதுதான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.  இந்த நீட் தேர்வுக்காக நீதிமன்றத்திலே வழக்கு நடக்கும் போது இந்த வழக்கிலே பல வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அதிலே நளினி சிதம்பரமும் ஒரு வழக்கறிஞர் என்றார். இந்த அரசை பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் பேச திறமை இல்லை. திராணி இல்லை. ஏன் தயக்கம் காட்டுகின்றனர். இவர்கள் அத்தனை பேரும் ஊழல் செய்தவர்கள். இவர்கள் பட்டியல் அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. எந்த நேரத்திலும் இவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறது என்பதால் அஞ்சுகின்றனர். 

Related Stories: