நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி: பாலக்கோட்டில் பரபரப்பு

பாலக்கோடு: பாலக்கோடு அருகே நீட் தேர்வு எழுதி விட்டு வந்த மாணவி, நேற்று மாலை கால்நடைகளுக்கான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஅள்ளி சாமனூர் கிராமத்தை சேர்ந்த நஞ்சுண்டன். இவர் சாஸ்திரமுட்லு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மோகனப்பிரியா(17), நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துள்ளார். அதே பள்ளியில் நீட் தேர்வுக்கும் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள மையத்தில் நீட் தேர்வை மாணவி மோகனப்பிரியா எழுதினார். தேர்வு  முடிந்து இரவு வீட்டிற்கு வந்தவர் சோகமாகவும், மன உளைச்சலுடனும் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை, வீட்டில் வைத்திருந்த கால்நடைகளுக்கான மாத்திரைகளை அரைத்து குடித்து விட்டு, ஒரு அறைக்குள் சென்று மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு, மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: